இப்படியொரு கடவுள் தேவையா..?






பசி பசி பசி இது என்ன தேசிய கீதமா..?
எங்கு திரும்பினாலும் கேட்கிறதே..!
வீதி தொடங்கி கோயில் வரை இந்த சத்தம் ஓய்ந்த பாடில்லையே..!
நாட்டின் ஒரு பக்கம் பசி
இன்னொரு பக்கம் கோயில் உண்டியலில்
பணம் கோடிக்கோடியாகப் சேர்கிறது. (இந்தியா ஒளிர்கிறது...!!!!!!!)

'கோயில் உண்டியல்கள்

பாவத்தின் புதையல்கள்!'


கோயிலின் பெயராலும், மதங்களின் பெயராலும் மனிதர்கள் செலவு செய்யும் பணங்கள் கொஞ்சமல்ல...
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள்-1062)

என்பர் வள்ளுவர்.

பிச்சை எடுத்துத்தான் ஒருவன் வாழவேண்டும் என்ற நிலையிருந்தால்,
இந்த உலகத்தைப் படைத்ததாகக் கூறும் இறைவன் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். அவன் கெட்டொழிந்து போவதே முறை என்பதே இக்குறளின் பொருள்.

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.”
-----------------------------------------------------திருமந்திரம் 1857



இதன் பொருள்
கோயிலில் இருக்கும் தெய்வத்துக்கு நீ கொடுக்கும் பொருள் அந்த தெய்வத்துக்குப் போய்ச் சேராது..!
ஆனால்....
பசியோடு இருக்கும் ஒரு மனிதனுக்கு நீ செய்யும் உதவி அந்த இறைவனையே சென்றடையும் என்பதாகும்.

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா !
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்பர் சிவவாக்கியார்.
இதன் பொருள்..
ஒரு கல்லை நட்டு அதனைச் சுற்றி வந்து நாலு மலர்களைத் தூவி மொண மொண என்று ஏதோ சொன்னால் அது மந்திரம் ஆகுமா..?
நட்ட கல்தான் பேசுமா..?
நாதன் உள்ளிருக்கையிலே..?
ஒரு சட்டியில் கறி சமைத்தால் அதன் சுவையை அந்த சமைத்த சட்டி அறியுமா..?
என்று கேட்கிறார் சிவவாக்கியார்..

மனிதர்களைப் பட்டினி போட்டு கடவுளுக்கு பாலாபிடேகமா..?

இப்படி ஒரு கடவுள் நமக்குத் தேவையா..?
என்று பசியில்லாத சமூகம் உருவாகிறதோ..
அன்றே பாலாபிடேகம் செய்வது முறை...
உண்மையிலேயே கடவுள் என்ற ஒன்று இருந்தால் கூட
பசியோடு இருக்கும் மனிதனைப் பார்த்துக்கொண்டு எனக்கு இருக்க கோயில் வேண்டும்!
உண்டியல் வேண்டும்!
ஆறு கால பூசையும் உணவும் வேண்டும்!
திருவிழா வேண்டும்.. !
என்றா கேட்கும்... !
அப்படி கேட்டால் அது கடவுளா..?




கடவுளின் பெயரால் மனிதர்கள்
நடத்தும் நகைச்சுவை நாடகம்
பக்தி!
கடவுள்!
மதம்!
திருவிழா!
பாலபிடேகம்!
இன்னும் இன்னும்..

2 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//மனிதர்களைப் பட்டினி போட்டு கடவுளுக்கு பாலாபிடேகமா..?//

சூப்பர் தலைவா!
மன்னிக்கவும், கொஞ்சம் தாமதம்..,

யாத்ரீகன் said...

Neenga varajadhaa ?!

sivakiyar paadalai kamal Aalavandhan-la soluvaaro ?! innaiku thaan varigal muludha therinjadhu , Nandri :-)

Be The fan Of Trackers

Recent Posts

Our Sponsors