
அண்டப்புளுகு என்றால் பூமி அளவுக்குப் பெரிய பொய்.
ஆகாசப்புளுகு என்றால் வானம் அளவுக்குப் பெரிய பொய்.
என்று பொருள் வழங்கிவருகிறோம்…
இதன் பொருளை இப்படி வழங்குவதே சரியாக அமையும்…..
அண்டம் என்றால் பூமி
புளுகு என்றால் பொய்
ஆகாசம் என்றால் வானம்
புளுகு என்றால் பொய்
இதில் எந்த மாற்றமும் இல்லை.
பொய் என்பதற்குக் கற்பனையாகக் கூறுவது இல்லாததைக் கூறுவது நடைபெறாததைக் கூறுவது என்று பொருள் கொள்ள இயலும்.
இவ்விடத்தில் …
புளுகு என்பது இல்லாததைக் கூறுவது என்ற பொருளில் வந்துள்ளது…
அண்டப்புளுகு என்பது - இந்த பூமி பொய்யானது. இந்த பூமியில் நிலையாக இருப்பது எதுவும் இல்லை.
இருப்பது போல இல்லாது இருக்கிறது பூமி
அதனால் தான் நம் முன்னோர்….
அண்டம் பொய்யானது என்ற பொருளில்
அண்டப்புளுகு என்று வழங்கியிருக்கின்றனர்…
ஆகாசப்புளுகு என்பது - வானம் இல்லாதது போல இருக்கிறது.
வானத்தில் எதுவுமே இல்லாதது போல இருக்கிறது. ஆனால் பல்வேறு கோள்களும் அங்கு தான் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆதாலால்….
ஆகாசம் என்பதும் பொய்யானது என்றனர்..
எனவே..
• அண்டப்புளுகு என்றால் இருப்பது போல இல்லாது இருப்பது.
• ஆகாசப்புளுகு என்றால் இல்லாது போல இருப்பது
என்றும் பொருள் கொள்வது சரியாக அமையும்.
(எங்கோ எதிலோ படித்தது…)
1 comments:
Super
Post a Comment